தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நாளை (22-11-2026) இடம்பெறவுள்ளது.
தெல்லிப்பளை பிரதேச செயலாளரால் ஒப்பமிடப்பட்டு மேற்படி காணிகளின் உரிமையாளர்களான 17 பேருக்கும் இதற்கான அழைப்புக் கடிதங்கள் தனித்தனியே கடந்த 19 ஆம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தேசிய ஒருமைப்பாடு
அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தால் யாழ். மாவட்ட அரச அதிபருக்கும் தனக்கும் (தெல்லிப்பளை பிரதேச செயலாளர்) கடந்த 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதாகப் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடல் நாளை காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |