குருதியால் எழுதப்பட்ட அல்லைப்பிட்டிப் பிலிப்பு நேரியார் தேவாலயப் படுகொலை
ஓகஸ்ட் 13 ஈழத் தமிழர்களின் வரலாற்றுப் பக்கங்களில் ஆறா வடுவாக, கண்ணீராலும் குருதியாலும் எழுதப்பட்ட மற்றொரு கருப்பு நாளாகும்.
2006ஆம் ஆண்டு இதே ஓகஸ்ட் 13 ஆம் திகதி, யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பிலிப்பு நேரியார் தேவாலயம் கொடூரத் தாக்குதலுக்கு இலக்கானது.
போர் உச்சமடைந்த வேளையில், "இறைவனின் இல்லத்தில் எமக்கு ஆபத்து வராது" என்ற ஒரே நம்பிக்கையோடு தங்களின் உயிரைக் காத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் அங்கே அடைக்கலம் புகுந்தனர். ஆனால், அந்த நம்பிக்கையும் பொய்த்துப்போனது.
ஶ்ரீலங்க இராணுவத்தின் செல்தாக்குதல்களினாலும் நேரடித் தாக்குதல்களினாலும் புனித தேவாலயத்திற்குள்ளேயே அப்பாவிப் பொதுமக்கள் உடல் சிதறி, கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
பெற்றோரை இழந்து குழந்தைகள் கதறியழுத காட்சியும், காயமடைந்தோரைக் காப்பாற்றத் துணிச்சலுடன் முன்வந்து, பின்னர் கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்ட பங்குத்தந்தை ஜிம் பிறவுண் (Fr. Jim Brown) அவர்களின் தியாகமும் வரலாறெங்கும் என்றும் நீங்காத வடுக்கள்.
அன்றைய கொடூரமான நாட்களையும் அன்று கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித்தமிழ் மக்களையும் கனதியான வலிகளோடு நினைவேந்துகிறது ஐபிசி தமிழ்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |