காலி சிறைச்சாலையில் கைதி மரணம்
Department of Prisons Sri Lanka
Death
Prisons in Sri Lanka
By Sumithiran
காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுவாசக்கோளாறு காரணமாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் காலி சிறைச்சாலையின் சந்தேகநபர் இலக்கம் 2840 இலக்கமுடைய முப்பத்திரண்டு வயதுடையவர் ஆவார்.
மூச்சுத் திணறல் காரணமாக
மூச்சுத் திணறல் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி முதல் அவர் காலி சிறைச்சாலையில் உள்ளார்.இறந்தவரின் பிரேத பரிசோதனை காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி