சந்திரபாபு நாயுடு கைது : பிணை அனுமதி மறுப்பு!
இந்தியாவின் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
''நீங்கள் ஊழல் குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறீர்கள், இந்தத் தகவலினை உங்களுக்கு அறியத்தருகின்றோம், இது பிணையில் விடுதலை செய்யமுடியாத குற்றமாகும்'' என்று அவரின் பிடியாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனு தாக்கல்
ஆந்திர மாநிலத்தின் நந்தியாளாவில் உள்ள ஞானபுரத்தில் வைத்து சந்திரபாபு நாயுடுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
#WATCH | Andhra Pradesh: Criminal Investigation Department (CID) serves arrest warrant to TDP chief and former Andhra Pradesh CM N Chandrababu Naidu.
— ANI (@ANI) September 9, 2023
(Video Source: TDP) pic.twitter.com/9AE4Xrdorm
கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடுவிற்கு, உயர் குருதி அமுக்கம் மற்றும் சர்க்கரை நோய் இருப்பதன் காரணத்தால் அவர், மருத்துவ பரிசோதனைகளுக்காக காவல்துறையினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிணைக்காக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.