அநுர - மோடி கூட்டணியில் புறந்தள்ளப்பட்ட ஈழத்தமிழர்கள்
சர்வதேச அரசியல் மட்டத்தில் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கும் விடயமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) இந்திய (India) விஜயம் காணப்படுகின்றது.
காரணம், புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவர் எந்த நாட்டுடன் இணைந்து தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க போகின்றார் என சர்வதேச ரீதியில் பாரிய எதிர்ப்பார்ப்பு நிலவியது.
சீனாவுக்கு சார்பான இடதுசாரிக்கொள்கையை கடைபிடிக்கும் ஒரு கட்சியாக அநுர குமார திஸாநாயக்கவின் கட்சி காணப்படுவதால் அவரது பயணம் சீனாவை (China) நோக்கி இருக்கலாம் என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்தினர்.
இருப்பினும், இவ்வாறான கருத்துக்களை தாண்டி அவரது விஜயம் இந்தியாவை நோக்கி இடம்பெற்றிருந்த நிலையில், அங்கு இந்திய பிரதமர் மோடியுடன் ( Narendra Modi) கலந்துரையாடப்பட்ட விடயங்களில் இலங்கைக்கான முக்கியத்துவம் இருந்ததா என்பது கேள்விகுறிய விடயமாக மாறியுள்ளது.
இந்தநிலையில், இது தொடர்பில் கனடாவின் அரசியல் ஆய்வாள் குயின்ரஸ் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |