பௌத்த ஒட்சினை பெற ஓடிய அநுரவும் ஜனவரி 3 தையிட்டி போராட்டமும்!
2026 ஆம் ஆண்டின் முதல் நாளில் சிறிலங்கா அரச தலைவர் அநுரவின் நகர்வுகள் அசாதாரணமாக இருந்தன.
புத்தாண்டு நாளில் கண்டி உட்பட அங்கும் இங்கும் ஓடிய அவர் சிறிலங்காவின் 4 பௌத்த பீடங்களின் தலைகளை ஒரே நாளில் சந்தித்தமை நாளை தையிட்டியில் போராடும் தமிழருக்கும் ஒரு குறியீட்டு செய்தி.
2022 ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் எவ்வாறு ராஜபக்ச முகங்கள் மலர்தட்டுகளை காவியடி விகாரைகளுக்கு ஓடி தமக்குரிய ஆதரவுக்கு பௌத்த மத ஒட்சிசனை பெற்றார்களோ அதுபோல இப்போது அநுரவும் செய்வதான கருத்தியல்கள் வந்துவிட்டன.
தையிட்டி திஸ்ஸ விகாரை தமிழர்களின் காணிகளில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட ஒரு கட்டுமானம் என்பதை வடக்கில் உள்ள இரண்டு பிரபல பௌத்த முகங்கள் சொல்லிய நிலையில் அவர்களில் ஒருவரான நயினாதீவு விகாராதிபதி இன்று சில பௌத்த பிக்குகள் சகிதம் தையிட்டிக்குசென்ற நிலையில் நேற்றைய தனது பௌத்த பீட தலைகளின் சந்திப்பின் போது அநுர தையிட்டி விடயத்தையும் தொட்டாரா என்பது தெரியவில்லை.
நாளை சிங்கள பௌத்தர்களுக்கு துருது போயா தினம் இதே துருது முழு நிலவு நாளில் தான் புத்தர் இலங்கைக்கு முதல் முறையாக சென்றதாக சிங்கள பௌத்தர்கள் நினைவுபடுத்தும் நாளில் தமிழர்கள் தமது நிலங்களில் பௌத்தத்தின் பெயரால் எழுப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் ஒன்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாரகும் நிலையில் இந்த விடயம் மற்றும் தென்னிலங்கையில் ஒலிக்கும் மாபியா வேட்டுகள் தொடர்பாக விடயங்களை தொட்டுவருகிறது செய்திவீச்சு......
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 7 மணி நேரம் முன்