இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை விடுவிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Beulah
இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிப்பதற்காக விசேட ஒருங்கிணைப்புக் குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
மருந்து வழங்கல் பணிப்பாளர் தலைமையில் குறித்த குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இன்று முதல் நடைமுறை
இதன்படி, இன்று (27) முதல் நடைமுறையாகும் வகையில் இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தரநிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும், பதிவு காலாவதியான மருந்துகளை அடுத்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரை மீண்டும் பதிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்து கட்டுப்பாட்டு அதிகார சபை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |