அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்!
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இராணுவ வீரர் ஒருவர் மித்தெனிய காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய, தோர கொலயாய பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18வது கெமுனு வாட்ச் பட்டாலியனில் இணைக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை கட்டுவெவவில் உள்ள 12வது டிவிஷன் தலைமையகத்தில் பணியாற்றும் 37 வயதுடைய சிப்பாய் என கண்டறியப்பட்டுள்ளது.
விடுமுறையில் ஐஸ் விற்பனை
இதேவேளை, இவர் எம்பிலிப்பிட்டிய, முலேந்தியாவல, தோர கொலயாய பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சோதனையின் போது, சந்தேக நபரிடமிருந்து 3700 மில்லிகிராம் ஐஸ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையில், விடுமுறையில் வீடு திரும்பி ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக ஒப்பு கொண்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேக நபர் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக மித்தெனிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
