பேஸ்புக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை விமர்சித்த முஸ்லிம் நபர் கைது
srilanka
police
gotabhaya rayapaksa
face book
By Vasanth
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக பேஸ்புக்கில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கொழும்பு - தெஹிவளையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார். தெஹிவளை – பீற்றர் வீதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று கொழும்பு பிரதான நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி