மதத்தின் பெயரைப் பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவர் கைது!
srilanka
arrest
police
women
By Vasanth
நாவலப்பிட்டியில் தேவாலயம் ஒன்றை நடத்துவதாக தெரிவித்து ஹெரோயின் விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமையவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேவாலயத்தின் பூசகர் மற்றும் தேவாலயத்திற்கு பொறுப்பான நபர் என்ற பெயரில் இவர்கள் அங்குதங்கியுள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் அதிகாரிகள் சுற்றிவளைத்த போது குறித்த பெண்ணின் பையில் இருந்து 140 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், இணையத்தளம் ஊடாக இவர் ஹெரோயின் விநியோகித்து வந்துள்ளார் எனபதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.