வங்கி கணக்குகளுக்கு வருகிறது பணம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்
அக்டோபர் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை நலன்புரி நன்மைகள் சபை (Welfare Benefits Board) வெளியிட்டுள்ளது.
வங்கிக் கணக்குகளில் வரவு
1,415,016 பயனாளி குடும்பங்களுக்கு 11,223,838,750.00 ரூபாய் தொகை விநியோகிக்கப்பட்டு, பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, பயனாளர்களுக்கு தமது வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து கொள்ளலாம் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
மேலும், அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 23,775 பயனாளி குடும்பங்களுக்கு நிதி மானியம் வழங்குவதற்கான திட்டத்தை அமைச்சரவை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
