ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் இல்லை
ஆயுர்வேத, சித்த, யுனானி மருத்துவ பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு மற்றும் எதிர்கால திட்டமிடல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் குழு (UGC) வழங்கிய தகவல் அறியும் உரிமைச் சட்ட (RTI) பதில் தற்போது பரவலான கவனத்தை பெற்றுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தயாராகும் மாணவர் ஒருவரின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட RTI மனுவுக்கான பதிலில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், ஆயுர்வேத பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்புகள் போதுமான அளவில் இல்லை என்பதாலும், புதிய பணியிடங்களை உருவாக்குவதில் சிக்கல்கள் நிலவுகின்றன என்பதையும் சுகாதார அமைச்சின் கருத்தாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
UGC பதிவு
இந்த விடயத்தை UGC தனது பதிலில் மறுக்காமல் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் Internship முடித்த பட்டதாரிகளுக்கான அரச நியமனங்கள், புதிய Cadre உருவாக்கம், சுதேச மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தும் தேசிய திட்டங்கள், எதிர்கால தேவைகளுக்கான Master Plan போன்ற விடயங்களில் தெளிவான நீண்டகால நடவடிக்கைகள் எதுவும் பதிலில் இடம்பெறவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
இதேவேளை, Internship தாமதத்தை குறைக்கும் நோக்கில் 2026 முதல் ஆண்டுக்கு இரண்டு முறை Internship ஆரம்பிக்க புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக UGC தெரிவித்துள்ளது.
நீண்டகால திட்டம்
அதன்படி ஜனவரி 1 மற்றும் ஜூன் 1 ஆகிய தினங்களில் Internship தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதிக கவனத்தை ஈர்த்த விடயம் என்னவெனில், 2024 A/L வரை பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்ட மாணவர்களையும் எதிர்கால பட்டதாரிகளையும் அடிப்படையாகக் கொண்டு தேசிய அளவிலான நீண்டகால திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு “இல்லை” என பதிலளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு A/L எழுதிய சில பட்டதாரிகளுக்குக் கூட இதுவரை நிரந்தர அரச நியமனம் கிடைக்காத சூழலில், Internship என்னும் உரிமையை சுகாதார அமைச்சு பிரமாண்டமாக முன்னிறுத்துவது நியாயமானதா என்ற கேள்வியையும் பலரும் எழுப்புகின்றனர்.
இந்த RTI பதிலைத் தொடர்ந்து, சுதேச மருத்துவ பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு நெருக்கடி, அரசின் திட்டமிடல் குறைபாடுகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் பொறுப்புகள் குறித்து புதிய விவாதங்கள் உருவாகி வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |