IBC பாஸ்கரன் செய்த 'அந்த' ஒரு தவறு! | நண்பர்கள் கடும் ஆதங்கம்
தமிழர் தாயகத்தில் புலம்பெயர் தமிழர்களால் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் குறித்து இன்றளவும் சில தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
தமது தாய்நிலம் என்ற அடிப்படையில், இனத்திற்காகவும் மக்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டங்கள், தென்னிலங்கை புலனாய்வு தரப்புகளின் ஒத்துழைப்புடன்தான் செயல்படுத்தப்படுகின்றனவோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அவற்றின் செயற்பாடுகள் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த விமர்சனங்கள், புலம்பெயர் தமிழ் தொழிலதிபரும் ஐ.பி.சி தமிழ் குழுமத்தின் தலைவருமான கந்தையா பாஸ்கரனையும் (Baskaran Kandiah) விட்டு வைக்கவில்லை.
அவரின் முயற்சியில் உருவாக்கப்பட்ட றீ(ட்)சா பண்ணைத் திட்டத்தில் தமிழர் அடையாளங்களை கட்டமைப்பது தொடர்பாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழர் மரபு, போராட்டம், தியாகங்கள் உள்ளிட்ட இனத்திற்காகப் போராடியவர்களின் வரலாறுகளையும் அவர்களின் அடையாளங்களையும் வெளிப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் என நல்லெண்ணம் கொண்ட சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழர்களுக்கான அடையாளங்களை பாதுகாத்து அதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வது தவறானது என்றால், அதை ஏன் கந்தையா பாஸ்கரன் முன்னெடுக்கிறார் என்பதை விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் “செய்திகளுக்கு அப்பால்” நிகழ்ச்சி.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |