அழகை அள்ளித்தரும் மாதுளம் பழம்! பிரம்மிக்க வைக்கும் நலன்கள்
பொதுவாக தினமும் பழங்களை உட்கொள்வதால் மனித உடலுக்கு பல மருத்துவ மற்றும் அழகுசார் நன்மைகள் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இதற்கமைய, பலவிதமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட மாதுளையை தினந்தோறும் உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மிக குறைந்தளவு கலோரிகள் கொண்டுள்ள மாதுளை, அதிகளவான விட்டமீன்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவைகளை கொண்டுள்ளதாகவும், இவை மனித உடலின் நாளாந்த செயல்பாடுகளுக்கு பாரியளவில் உதவுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாதுளம் பழம்
உலகில் உள்ள பழங்களிலேயே மிக பழமையான மாதுளம் பழத்தில், 720 வகைகள் உள்ளன.
நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும் குணங்களையும் கொண்ட இந்த மாதுளம் பழம், பிளேக், புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும் மகத்துவத்தை கொண்டுள்ளது.
நலன்கள்
மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளைக் குணமாக்கும் சக்தி கொண்டவை.
மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, முடிவளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் விட்டமீன் மற்றும் தனிமங்கள் முடியைப் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.
தினமும் மாதுளம் சாப்பிட்டால், மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும்.
அத்துடன், அல்சைமர் மற்றும் மூளைக் கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும். கர்ப்பிணிப் பெண்கள், தினமும் மாதுளம்பழச் சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணைபுரியும்.
மருத்துவ நன்மைகள்
ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். மாதுளை, வயிற்றில் குவிந்துள்ள தேவையற்றக் கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது.
செரிமானப் பிரச்சினைகளைச் சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயைக் குறைப்பதற்கும் துணைபுரியும்.
உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை மாதுளம் பழம் தூண்டுவதால், எலும்புகள் வலுப்பெற உதவும்.
மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன.
தினமும் 100 மில்லிலீற்றர் மாதுளம்பழச் சாற்றை பருகிவந்தால், ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |