மட்டக்களப்பில் விவசாயி ஒருவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு பகுதியில் விவசாயி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் மட்டக்களப்பு - வாழைச்சேனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஊத்துச்சேனை பகுதியில் நேற்று (12.05.2026) மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், மட்டக்களப்பு - வாகனேரி குளத்துமடு பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய செல்லத்துரை கோபால் என்ற விவசாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நீதிமன்ற அனுமதி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மழை பெய்து கொண்டிருந்த நிலையில் குறித்த விவசாயி வயல் வேலைக்காக வெளியே சென்றுள்ளார்.

மேலும், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடி சென்றபோது கால்வாயில் சடலமாக கிடந்ததை கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வாழைச்சேனை காவல்துறையினர் நீதிமன்ற அனுமதி பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த மரணம் தொடர்பாக வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |