பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் - கூட்டமைப்பினர் முக்கிய பேச்சு
srilanka
address
coalition
By Vasanth
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டனை உத்தியோக பூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கட்சியின் ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபைத் தேர்தல்கள், நில அபகரிப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும், குறித்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்ததாகவும் கு.சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் ரெலொ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்