யாழில் அதிரடி படையினர் மீட்ட பெருந்தொகை வெடிபொருட்கள்
Jaffna
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Dilakshan
மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று மாலை (02) கண்டுபிடிக்கப்பட்டன.
காணி ஒன்றை பண்படுத்தலில் போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்த தகவல் காணி உரிமையாளரால் மானிப்பாய் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டதையடுத்து விசேட அதிரடி படையினர் தொடர்புடைய காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இன்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
1015 தோட்டாக்கள்
மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த வெடிபொருட்கள் இன்றைய தினம் (03) விசேட அதிரடி படையினரால் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது Gpmp 1015 தோட்டாக்கள் அகற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி