பிள்ளையானை வைத்து காய்நகர்த்தும் சி.ஐ.டி! கைது வளையத்துக்குள் இராணுவ அதிகாரிகள்!
ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்டதாக கூறப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் முழுமையாக பூர்த்தியடைந்துள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகள் இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நீதியும் இதுவரையில் பெற்றுக் கொடுத்துள்ளனவா? என்பது கேள்விக்குறியே.
இந்நிலையில், தற்போதைய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிள்ளையான் எனப்படும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் முழுமையான தொடர்புகள் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கருத்து வெளியிட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடமேற முன் தனது தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், குறித்த தாக்குதல் தொடர்பில் உரிய நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் சில தினங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான விபரங்களை விரிவாக எடுத்துரைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
