BYD வாகன விற்பனையில் கடும் சரிவு
மோட்டார் வாகனப் பதிவுத் துறையின் தரவுகளின் அடிப்படையில் CAL ஆராய்ச்சி வெளியிட்ட அறிக்கையின்படி, ஒக்டோபர் 2025 இல் BYD கார் பதிவுகளில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபரில் பதிவு செய்யப்பட்ட BYD மாடல் வாகனங்களின் எண்ணிக்கை 563 ஆக காணப்பட்டுள்ளது.
அதற்கு முந்தைய மாதமான செப்டம்பரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 1,531 ஆகும்.
63 சதவீத குறைவு
இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஒக்டோபரில் பதிவுகள் 63 சதவீதம் குறைந்துள்ளன.

கார் இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, ஒக்டோபரில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான BYD பதிவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனைத்து பதிவுகளுடன், இதுவரை நாட்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த BYD கார்களின் எண்ணிக்கை 6,949 ஐ எட்டியுள்ளது.
BYD கார்களிடையே ATTO மாடலுக்கான தேவை அதிகமாக இருந்தபோதிலும், சுங்கம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக வாகனங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதம் ஒக்டோபரில் பதிவுகள் குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்