யாழில் துப்பாக்கிச்சூடு நடத்திய விசேட அதிரடிப்படை! அஜித் ரோஹண கொடுத்த விளக்கம்
police
jaffna
ajith rohana
gun
By Shalini
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண விளக்கமளித்துள்ளார்.
இதில் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் தண்டனைச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்த நிர்பந்திக்கப்பட்டனர் என்றார்.
மேலும் தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், துப்பாக்கிச் சூட்டுக் காயமடைந்த இரண்டு பேர் பருத்தித்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் பின்னர் தெரியவந்தது.
சம்பவம் நடந்த நேரத்தில் வண்டியில் இருந்த சாரதி மற்றும் பிற நபர்களை கைது செய்ய பொலிஸார் தொடர்ந்து தங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றார்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்