புதிதாக கனடா செல்லவுள்ளவரா நீங்கள்..! வெளியாகிய எச்சரிக்கை
புதிதாக கனடா செல்பவர்கள் அதிகளவில் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக கனடாவிற்குள் குடியேறும் குடியேறிகள், ஏதிலிகள் போன்றோரை இலக்கு வைத்து மோசடிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கல்கரியைச் சேர்ந்த ஓர் தம்பதியினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
புதிதாக கனடா வருவோரை ஏமாற்றி வீடுகள் வாடகைக்கு உண்டு எனக் கூறி அவர்களிடம் மோசடி செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.
ஆங்கில அறிவு இல்லாத காரணம்
வீடு வாடகைக்கு என விளம்பரம் செய்யாமலேயெ தமது வீட்டை இவ்வாறு வந்து பார்த்து விட்டு செல்வதாக ஜாஸ்லின் ரெய்னோ (Jaclyn Rhyno) தெரிவிக்கின்றார்.
வீடு பார்க்க வருவோர், வீடு வாடகைக்கு விடப்படாது என கூறும் போது பெரும் ஏமாற்றத்துடன் அந்த இடத்தை விட்டு செல்வதாக தெரிகிக்கின்றார்.
புதிதாக நாட்டுக்கு வருவோருக்கு போதியளவு ஆங்கில அறிவு இல்லாத காரணத்தினால் அவர்கள் எளிதில் ஏமாற்றப்படுவதாக குடிவரவு கல்வி சமூகம் என்ற அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது
