மொட்டுக்கட்சியில் கடும் அதிருப்தி -மாற்றப்படுகிறது அமைச்சரவை?
srilanka
gotabaya
capinet
By Jaso
மொட்டுக்கட்சியில் அதிகரித்துவரும் அதிருப்தி நிலையை சமாளிக்கும் வகையில் மூன்று சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சுதந்திரக்கட்சியிலிருந்து வெளியேறி பொதுஜனபெரமுனவுடன் இணைந்துள்ள மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு எவ்வித அமைச்சுப்பதவியும் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் அந்த மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸநாயக்க மீண்டும் சுதந்திரக்கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திசாநாயக்க, அநுர பிரியதர்சன யாப்பா மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கே அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்