வடமராட்சியில் மாடுகளுக்கு பெரியம்மை நோய் - 8 மாடுகள் உயிரிழப்பு
Jaffna
By Vanan
வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கால்நடை வைத்திய அதிகாரி பிரிவிலும் மாடுகளுக்கு பெரியம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது.
இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு கொட்டோடை பகுதியில் பல மாடுகளுக்கு அம்மை நோய் இனங்காணப்பட்டுள்ளது.
தடுப்பு நடவடிக்கை
கடந்த இரண்டு வாரங்களில் குறித்த மாட்டுப் பட்டியில் எட்டு மாடுகள் இறந்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்துவதற்கு உதவுமாறும் பண்ணையாளர்கள் கோரி வருகின்றனர்.
குறித்த பட்டியில் பாதிக்கப்பட்ட மாடுகளுக்கான சிகிச்சையை இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளரும் மருதங்கேணி கால்நடை வைத்தியருமான எஸ்.சுகிர்தன் நேரடியாகச் சென்று அளித்து வருகின்றார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்