அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு சட்டமூலம் : கஞ்சன விஜேசேகர தகவல்
இலங்கையின் மின்சாரத்துறையை மறுசீரமைப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவை அங்கீகாரத்துக்காக இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
உத்தேச மின்சாரத் துறை மறுசீரமைப்பு சட்டமூலம்
முன்மொழியப்பட்ட உத்தேச மின்சாரத் துறை மறுசீரமைப்பு சட்டமூலம் கடந்த 10 மாதங்களாக தயாரிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் மின்சாரத் துறை, துறைசார் நிபுணர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட முக்கிய தரப்பினரின் உதவியுடன் குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாகவும் கஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Today, I tabled the proposed Electricity sector Reforms Bill for the observations & approval of the Cabinet of Ministers.
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 30, 2023
The proposed reforms will unbundle the services of CEB, improve efficiency, transparency, competition & allow private sector participation in the…