அனைத்து வங்கிகளுக்கும் மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள பணிப்பு!
srilanka
central bank of srilanka
peoples
dollars
By S P Thas
உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு அமெரிக்க டொலர்களை வழங்குமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் (Ajith Nivard Cabraal) தெரிவித்துள்ளார்.
கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் பெற்றோர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு பணம் செலுத்துவது குறித்து கவலை வெளியிட்டிருந்தனர்.
அரச தலைவரின் ஊடகப்பிரிவு ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் இது குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,