சொத்து அறிக்கையை வெளியிட தயார்! மத்திய வங்கி ஆளுநர் அதிரடி
தனது சொத்துக்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்க தயார் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
தனது சொத்து எவ்வாறு ஈட்டப்பட்டது என்பது குறித்து விரிவான விளக்கம் தேவைப்படும் எவரும் முறையான நடைமுறையைப் பின்பற்றி இது தொடர்பாக முறைப்பாடு அளிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டப்பூர்வ சொத்து
அத்தோடு, ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி வழங்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தனது மற்றும் தனது குடும்பத்தினரின் அனைத்து சொத்துக்களும் சட்டப்பூர்வமாகப் பெறப்பட்டுள்ளன என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தனது சொத்துக்கள் தொடர்பில் முறைப்பாடு அளிக்கும் எவரும் தங்கள் சொத்துக்களை எவ்வாறு பெற்றனர் என்பதை கடைசி விவரம் வரை விளக்கக் கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, கடந்த ஆண்டும் அதற்கு முன்பும் இதே முறையில் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிக்கைகளை சமர்ப்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆளுநர் குடும்பத்தின் மொத்த சொத்து
மேலும், தான் 40 ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் வருமான வரி கோப்பைத் திறந்ததாகவும், கடந்த ஏழு ஆண்டுகளாக தான் சம்பாதித்த சொத்துக்களுக்கு வருமான வரி செலுத்தியதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரூ. 245,979,337, அமெரிக்க டொலர் 581,018 மற்றும் அவுஸ்திரேலிய டொலர் 16,730 சொத்துக்கள் உள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்த்ககது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
