குறுகிய காலத்தில் சீரழிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சி அறிக்கை
Parliament of Sri Lanka
Sri Lankan Peoples
Saroja Savithri Paulraj
By Dilakshan
இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று தண்டனைச் சட்டத் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிறுவர்கள் கொடுமை
வீடுகள், பாடசாலைகள், தடுப்பு மையங்கள் மற்றும் வீதிகள் போன்ற இடங்களில் சிறுவர்கள் கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டு 1,350 சிறுவர்கள் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகவும் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 1,126 சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
