105 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று ஏற்பட்ட மாற்றம்
Weather
People
Chennai
By Vasanth
தமிழகத்தில் கடந்த 1915-ம் ஆண்டுக்கு பிறகு நேற்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் அதிக மழை பெய்ததால் சென்னை தியாகராயநகர் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கின்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென்று கடும் மழை பெய்துள்ளது. பல இடங்களில் கனமழையும் கொட்டியது.
வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்று இருந்தாலும், பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
அந்தவகையில் ஜனவரி மாதம் 12-ந் திகதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பெய்த மழை அளவில் நேற்று பெய்த மழைதான் அதிகம் என்று கூறப்படுகிறது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி