விண்வெளியில் அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம்!
விண்வெளியில் சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டில் சுமார் 100 விண்வெளி ஏவுதல்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை, புதிய வரலாற்று பதிவை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப நடவடிக்கை பற்றிய கடந்த ஆண்டுக்கான நீல அறிக்கையை அந்த நாட்டு விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப குழுமம் இன்று (26) வெளியிட்டுள்ளதுடன், இந்த ஆண்டுக்கான சீனாவின் விண்வெளி ஏவுதல் நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிவித்துள்ளது.
விண்வெளி ஏவுதல்கள்
இதன்படி, சீனாவின் முதலாவது வணிக விண்வெளி ஏவுத் தளத்தில் இந்த ஆண்டுக்கான முதலாவது ஏவுதல் கடமை மேற்கொள்ளப்படவுள்ளது.
அத்துடன், செயற்கை கோள் விண்மீன் தொகுதியின் இணைப்பு கட்டுமானம் விரைவுப்படுத்தப்படவுள்ளது.
முக்கிய திட்டங்கள்
சீன விண்வெளி அறிவியல் தொழில் நுட்ப குழுமம் சுமார் 70 முறை விண்வெளி செலுத்தல் கடமைகளை ஏற்பாடு செய்து, 290க்கும் மேலான விண்கலங்களை விண்ணில் செலுத்தி, பல முக்கிய திட்டப்பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு சீனா 67 விண்வெளி ஏவுதல் கடமைகளைச் செயல்படுத்தியுள்ளதுடன், உலகளவில் இந்த நடவடிக்கைகளை செயல்படுத்தும் தரவரிசையில் இரண்டாவது இடத்தை சீனா பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
?? is projected to make about 100 space launch missions this year, seting a new record. Launches include the maiden flight from China's first commercial spacecraft launch site in addition to more satellite liftoffs to form constellations. Further reading?https://t.co/goKnLWt5kG pic.twitter.com/27ag0lbF2x
— Embassy of China in the Netherlands (@ChinaEmbNL) February 26, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |