அமெரிக்காவுக்கு தெரியாமல் சீனா செய்த காரியம்: திரையை கலைத்த வெளிநாடு

Donald Trump United States of America China South Korea World
By Harrish Apr 22, 2025 12:40 PM GMT
Report

அமெரிக்காவின் (USA) வரி விதிப்பை தவிர்க்க சீன நிறுவனங்கள் தென்கொரியாவின் பெயரில் தங்கள் பொருட்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரிவிதிப்பை நடைமுறைப்படுத்தினார்.

புனித பாப்பரசரின் இளமைக்கால காதல் : வெளிவரும் சுவராஸ்ய தகவல்

புனித பாப்பரசரின் இளமைக்கால காதல் : வெளிவரும் சுவராஸ்ய தகவல்

வர்த்தக போர் 

இதையடுத்து, பதிலடியாக சீனாவும் அமெரிக்கா மீதான வரியை உயர்த்தியது.

அமெரிக்காவுக்கு தெரியாமல் சீனா செய்த காரியம்: திரையை கலைத்த வெளிநாடு | China Export Goods To Us Name South Korea

மேலும், அமெரிக்கா அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்'கிடம் இருந்து விமானங்கள் வாங்க சீன விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. 

அதனை தொடர்ந்து சீன பொருட்களுக்கான வரியை 245 சதவீதமாக ட்ரம்ப் உயர்த்தினார். இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போர் தீவிரமடைந்தது. 

சீனா செய்த செயல்

இந்நிலையில், கூடுதல் வரி விதிப்பை தவிர்க்க, சீன நிறுவனங்கள் தென் கொரியா பெயரில் தங்கள் பொருட்களை அனுப்புவதை தென்கொரியா சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

சீனாவில் தயாரிக்கப்படும் நிறுவனங்களை தென் கொரியாவிற்கு அனுப்பி, அங்கிருந்து "Made in Korea" என்ற பெயரில் அமெரிக்காவிற்கு அனுப்புவதை, தென்கொரியா சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். 

அமெரிக்காவுக்கு தெரியாமல் சீனா செய்த காரியம்: திரையை கலைத்த வெளிநாடு | China Export Goods To Us Name South Korea

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 20.81 மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் வேறு நாட்டில் தயாரித்து "Made in Korea" என பெயரிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் 97% பொருட்கள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கொரியா சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன், கடந்த மார்ச் மாதம், 13.6 மில்லியன் டொலர் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள், சீனாவில் இருந்து தென் கொரியாவிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து, "Made in Korea" என பெயரிடப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. 

பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி!

பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி!

கூட்டு விசாரணை

இதன் பின்னர், தென் கொரிய சுங்க அதிகாரிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கிடையேயான கூட்டு விசாரணை முயற்சிகள் குறித்து விவாதிப்பதற்காக ஒரு சந்திப்பு நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில், "அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடாகவும், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டதாக உள்ள தென் கொரியாவை, வரிகள் மற்றும் விதிமுறைகளைத் தவிர்ப்பதற்கான வழியாக, சீனா போன்ற நாடுகள் பயன்படுத்த முயற்சிப்பது அதிகரிக்கும் எனவும், ட்ரம்ப் ஆட்சி தொடங்கியதில் இருந்தே சீன நிறுவனங்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகவும்" தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு தெரியாமல் சீனா செய்த காரியம்: திரையை கலைத்த வெளிநாடு | China Export Goods To Us Name South Korea

சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படும் இந்த முயற்சிகளைத் தடுக்க சிறப்பு குழுவை தென் கொரியா தொடங்கியுள்ளது.

மேலும், உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ட்ரம்பை அதிர வைத்த ஹார்வர்ட் பல்கலை நிர்வாகம்

ட்ரம்பை அதிர வைத்த ஹார்வர்ட் பல்கலை நிர்வாகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி