தலாய் லாமாவின் இலங்கை விஜயம் - சீனா கடும் எதிர்ப்பு
திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இலங்கை வருவதற்கு சீனா தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அவர் ஒரு மதப் பிரமுகராக மாறுவேடமிட்டு, சீனாவிற்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, சீனாவில் இருந்து திபெத்தை பிரிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது சீனா.
தலாய் லாமா ஒரு "எளிய துறவி" அல்ல

இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி Hu Wei, கண்டியில் உள்ள மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்த போதே மேற்கண்ட எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
14வது தலாய் லாமா ஒரு "எளிய துறவி" அல்ல என்பதால், திபெத் தன்னாட்சிப் பகுதி உட்பட சீனாவின் அரசாங்கமும் மக்களும் தலாய் லாமாவின் வருகையை கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று ஹு வெய் கூறினார்.
ஒருவருக்கொருவர் ஆதரவு

சீனாவும் இலங்கையும் திபெத் தொடர்பான பிரச்சினை உட்பட பரஸ்பரம் முக்கிய நலன்கள் தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் உறுதியாக ஆதரவளித்து வருவதாக ஹு வலியுறுத்தினார்.
இரு தரப்பினரும் குறிப்பாக பௌத்த சமூகங்கள் "திபெத்திய சுதந்திரத்தை" மேம்படுத்துவதற்கும், சீன-இலங்கை வரலாற்று உறவுகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பதற்கும் தலாய் லாமாவின் இலங்கைக்கான வருகையை வருகையைத் தடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.