உளவுக் கப்பலால் கொதிக்கும் இந்தியா..! சீனா கொடுத்த பதிலடி
சீனக்கப்பலின் இலங்கைக்கான பயணம் தொடர்பில் இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகள் குறித்து அந்த நாட்டிடமே விளக்கம் கேட்க வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் ஹாங் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இன்று காலை சென்றடைந்த யுவான் வாங் 5 கப்பலின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட சீன தூதுவரிடம் ஊடகவியளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இவ்வாறு கூறியுள்ளார்.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இலங்கை வந்தடைந்த சீன கப்பல், சிறிலங்கா அரசியலில் ஏற்படும் நெருக்கடி, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எடுக்கப்படும் முயற்சிகள், வல்லரசு போட்டியின் நடுவில் சிக்கி தவிக்கும் தாய்வான் என இன்று(16) எமது தளத்தில் பல முக்கியமான செய்திகளை பிரசுரித்திருந்தோம்.
அவற்றுள் சில முக்கிய செய்திகளை நீங்கள் தவறவிட்டு இருக்கலாம். எனவே நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீன கண்காணிப்புக் கப்பல்
சீனாவின் யுவான் வாங் 5 (Yuan Wang 5) கண்காணிப்புக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை கடற்பரப்பு பிராந்தியத்திற்குள் நேற்று (15) பிற்பகல் உள்நுழைந்திருந்த நிலையில் இன்று காலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் வருகைதந்துள்ளது.
மேலதிக தகவல் :- ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது சீன கண்காணிப்புக் கப்பல் 'யுவான் வாங் 5' (படங்கள்) |
மிரட்ட வைக்கும் சீன கப்பலின் அதி நவீன தொழில்நுட்பங்கள்!
சீனாவின் கண்காணிப்பு கப்பல்களுக்குள் மிக பிரமாண்டமான 'யுவான் வாங் 5' கப்பல் இன்று சிறிலங்கவின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் உடைய இந்த கண்காணிப்பு கப்பலில் அதி நவீன விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளதாகவும் விண்ணில் பறக்கும் செயற்கை கோள்களைக்கூட இந்த கண்காணிப்பு கப்பலால் ஆய்வு செய்ய முடியும் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே கப்பலின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.
மேலதிக தகவல் :- மிரட்ட வைக்கும் சீன கப்பலின் அதி நவீன தொழில்நுட்பங்கள்! இந்திய தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட சிக்கல் |
சீண்டும் அமெரிக்கா - தாய்வான் கடற் பரப்பில் பதற்றம்!
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்றுமுன்தினம் தாய்வானுக்குப் பயணம் மேற்கொண்டதை அடுத்து, அத்தீவுக்கு அருகில் சீனா கடுமையான போர்ப் பயிற்சிகளை நடாத்தியுள்ளது.
இது சீன தாய்வான் கடற்பரப்பில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தாய்வான் பயணத்துடன் குறித்த பதற்றம் ஆரம்பித்திருந்தது.
மேலதிக தகவல் :- சீண்டும் அமெரிக்கா - தாய்வான் கடற் பரப்பில் பதற்றம்! அசுர வேகத்தில் போர் பயிற்சியில் இறங்கிய சீனா |
யாழ். பல்கலை மாணவிகளுக்கு இம்சை கொடுத்த மர்ம நபர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் ஆபாசமாக பேசுவதாக கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும் நபர் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.
மேலதிக தகவல் :- யாழ். பல்கலை மாணவிகளுக்கு இம்சை கொடுத்த மர்ம நபர் - வெளிச்சத்திற்கு வந்த தகவல் |
கைலாகு கொடுத்த சரத் வீரசேகரவை அவமதித்தாரா சீன கப்பலின் கப்டன்!
சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் யுவான் வாங்-5 இன்று காலை வந்தடைந்தது.
இந்நிலையில், கப்பலை வரவேற்பதற்காக சிறிலங்கா அமைச்சர்கள்சிலர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் சென்றிருந்தனர்.இவ்வாறு கப்பலை வரவேற்பதற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சீன கப்பல் கப்ரனுக்கு கைலாகு கொடுத்துள்ளார்.
மேலதிக தகவல் :- கைலாகு கொடுத்த சரத் வீரசேகரவை அவமதித்தாரா சீன கப்பலின் கப்டன்! |
சடுதியாக விலை குறைந்த துவிச்சக்கர வண்டிகள்!
துவிச்சக்கர வண்டிகளின் விலைகள் வெகுவாக குறைந்துள்ளதாக துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிப்பாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் ரிஸ்னி இஸ்மத் தெரிவித்துள்ளார்.
துவிச்சக்கர வண்டிகளின் விற்பனை வீழ்ச்சியடைந்ததன் காரணமாக அதன் விலைகளும் சடுதியாக குறைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலதிக தகவல் :- சடுதியாக விலை குறைந்த துவிச்சக்கர வண்டிகள்! |
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி..!
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 16 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.
டொலரின் பெறுமதி இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 37 சதமாகவும், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 368 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.
மேலதிக தகவல் :- அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி..! மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல் |
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி!
டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி வெளியீட்டு விழா நிகழ்வு இன்று இடம்பெற்றது.
இது குறித்து எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக தகவல் :- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட மின்சார முச்சக்கரவண்டி! |