கட்டுநாயக்காவில் தொடர்ந்து சிக்கும் சீன வர்த்தகர்கள்
எண்பத்து மூன்று இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்தி, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள "பசுமைப் பாதை" வழியாக வெளியே கொண்டு செல்ல முயன்ற மூன்று வெளிநாட்டுப் பயணிகள், இன்று காலை (03) விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 35, 38 மற்றும் 50 வயதுடைய சீன தொழிலதிபர்கள் ஆவர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்த வர்த்தகர்கள்
அவர்கள் இன்று அதிகாலை 02.45 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-319 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

சீனாவில் தயாரிக்கப்பட்ட 55,800 சிகரெட்டுகள் அடங்கிய 279 சிகரெட் அட்டைப் பெட்டிகளை 6 பயணப் பைகளில் அவர்கள் மறைத்து வைத்திருந்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |