வான்பரப்பில் அதிகாலையில் தோன்றிய மர்மப் பொருள்
புத்தளம் நகருக்கு மேலாக வானில் நெருப்பு பிழம்புகளுடன் மர்மப் பொருள் தென்பட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மர்மப் பொருளைப் பார்ப்பதற்காக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த மர்மப் பொருள் பல அடி நீளமுடையதாகக் காணப்பட்டதுடன், ரொக்கெட் அல்லது ஏவுகணை போன்ற ஒரு எரியும் வாலையும் கொண்டிருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
விண்கல்லாக இருப்பதற்கே வாய்ப்புகள்
இது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியரும், ஆர்தர் சி. கிளார்க் அதிநவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன கருத்துத் தெரிவிக்கையில், இந்த பொருள் ஒரு விண்கல்லாக இருக்கக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

"எரியும் வாலுடன் காணப்பட்டிருந்தால், அந்தப் பொருள் விண்கல்லாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம்.
விண்கற்கள் ஆண்டின் எந்தவொரு காலத்திலும் இரவு வேளைகளில் தென்படக்கூடியவை. எனவே, இது ஒரு விண்கல்லாக இருக்கலாம்" என அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இது குறித்து ஒரு உறுதியான முடிவுக்கு வருவதற்கு முறையான மற்றும் விரிவான ஆய்வு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்றும் பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |