நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணை! சிஐடி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலக்கரி கொள்வனவு தொடர்பான விசாரணைகள் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சர்ச்சைக்குரிய இந்த நிலக்கரி கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து கொள்முதல் கோப்புகளையும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தனது பொறுப்பில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆவணங்களுக்குப் பொறுப்பாக இருந்த அனைத்து அதிகாரிகளிடமிருந்தும் ஏற்கனவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தையிட்டி காணி அளவீட்டுக்கு நாள் குறித்து விட்டு வெளிநாட்டிற்கு தப்பியோடிய அமைச்சர் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
தடயவியல் பரிசோதனை
தற்போது கைப்பற்றப்பட்டுள்ள கொள்முதல் கோப்புகளை விரிவாக ஆய்வு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, கணினிகளில் உள்ள தரவுகளை மீளாய்வு செய்வதற்கான தடயவியல் பரிசோதனைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்வனவுகள் மற்றும் அதில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் செயலாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்தே இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |