தொடர்ந்தும் உயிரிழந்து ஒதுங்கும் கடலாமைகள்
death
kaluthurai
turtles
By Jaso
எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்து கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது தொடர்கதையாகிவிட்டது.
குறிப்பாக கடல் ஆமைகளே பெருமளவில் உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன.
அந்த வகையில் களுத்துறை – வஸ்கடுவ சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்த கடலாமை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கிராம் எடைகொண்ட இந்தக் கடலாமையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர்.
இதேவேளை மொரட்டுவ – அங்குலான கடற்கரையில் டொல்பினை ஒத்த உயிரினம் ஒன்றின் உடற்பாகங்கள் நேற்று கரையொதுங்கியிருந்தன.
இந்த உயிரினம் ஒரு பாலூட்டியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக அத்திடிய வனஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி