வழமைக்கு திரும்பும் தொடருந்து சேவைகள் - போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்
train
service
return to normal
By Vanan
கொரோனா பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த பயணிகள் தொடருந்து சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை தெரிவித்துள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தின் சகல தொடருந்து சேவைகளும் ஆரம்பமாகும்.
எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான தொடருந்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.