2.5 மில்லியன் மோசடி : நிதிக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விசாரணை அறிக்கை
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரசாங்கத்தின் திறைசேரி நிதி மாயமான சர்ச்சை குறித்து தயாரிக்கப்பட்ட விசேட விசாரணை அறிக்கை தற்போது அரசாங்க பொது நிதி பற்றிய குழுவிடம் (COPF) உத்தியோகபூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) நேற்று (04) நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக்கூட்டத்தின் போது இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த அறிக்கையின் பிரதிகள் அனைத்தும் விரிவான ஆய்விற்காகக் குழுவின் ஏனைய அனைத்து உறுப்பினர்களுக்கும் தற்பொழுது விநியோகிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்
அத்துடன் அடுத்த வாரம் திறைசேரியின் செயலாளருடன் நடத்தப்படவுள்ள விசேட உயர்மட்டக் கலந்துரையாடலுக்கு முன்னதாக இந்த அறிக்கை முழுமையாக ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றக் குழுவின் உத்தியோகபூர்வ கண்காணிப்புப் பொறுப்புகளின் ஒரு பகுதியாகக் கோரப்பட்ட இந்த இரகசிய அறிக்கையை, ஹர்ஷ டி சில்வாவின் தனிப்பட்ட இல்லத்திற்கு கொண்டு சென்று ஒப்படைக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியை அவர் நிராகரித்திருந்தார்.
இதனை அடுத்து, இவ்வறிக்கை முறைப்படி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பாரிய இனச்சிக்கல்களுக்கு வழிகோலிய தனிச்சிங்களச் சட்டம்…. 20 மணி நேரம் முன்