ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் கொரோனா உறுதி!
Corona
Ranjan Ramanayaka
SriLanka
By Chanakyan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள என சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் தமது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக விசேட அனுமதியில் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இதுவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு முன்னரும் 5இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி