ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஏற்பாடு! கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டது இடம்?
srilanka
corona
colombo
death
virus
By Vasanth
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இருவரது உடல்கள் இன்று வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்படி, சுகாதார நெறிமுறைகள் குறித்து வெளியாகிய வர்த்தமானி அறிவிப்புக்கமைவாக இந்த அடக்கம் செய்கின்ற செயற்பாடு இன்று மாலை இடம்பெறவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இடத்தில் இந்த அடக்கம் செய்கின்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இரணைதீவில் கொரோனாவால் பலியானவர்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.