மின்கட்டண உயர்வைக் கண்டித்து பாகிஸ்தானில் நாடுதழுவிய போராட்டத்தில் மக்கள்
Pakistan
By Kathirpriya
பாகிஸ்தானில் நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள உயர்வைக் கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடி

பாகிஸ்தானில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 70 சதவீதமானது இறக்குமதி செய்யப்படுகின்ற எரிபொருளைச் சார்ந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 15 மாதங்களில் பாகிஸ்தானின் மின்சார கட்டணங்கள் நான்கு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக பாகிஸ்தானில் பெற்றோல், டீசல் என்பவற்றின் விலையில் உயர்வு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் மின்கட்டணமும் உயர்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.