யாழ்ப்பாணம் - மண்டைதீவு புதைகுழி விவகாரம் - நீதிமன்றத்தின் உத்தரவு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Theepan Nov 10, 2026 07:23 AM GMT
Report

மண்டைதீவு புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 2027 ஜனவரி 05 ஆம் திகதிக்கு மீள விசாரணைக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1990களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய புதைகுழி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த வழக்கு இன்று (10) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

யாழில் முளைத்த திடீர் பணக்காரர்கள் அச்சத்தில் - தீவிரமாகும் விசாரணை

யாழில் முளைத்த திடீர் பணக்காரர்கள் அச்சத்தில் - தீவிரமாகும் விசாரணை

காலதாமதம்

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினர் தங்களிடமிருந்த சான்றுகளை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

யாழ்ப்பாணம் - மண்டைதீவு புதைகுழி விவகாரம் - நீதிமன்றத்தின் உத்தரவு | Court Order Jaffna Mandaitivu Mass Grave Case

எனினும், சம்பவம் இடம்பெற்றதாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் இராணுவ முகாம் இருந்தமைக்கான ஆதாரங்களையும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்போது அங்கிருந்த இராணுவ அதிகாரிகளின் விபரங்ககையும் சமர்ப்பிக்குமாறு இராணுவத்தினரிடம் கோரியிருந்த அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனப் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனால் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட காவல்துறையினர், விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மேலும் கால அவகாசம் கோரினர்.

இதன்போது, விசாரணைகளைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள், மேலதிக சாட்சியங்கள் மற்றும் தடயங்களை விரைவாகத் திரட்டி சமர்ப்பிக்க வேண்டுமென கோரினர்.

இதையடுத்து நீதிவான் எதிர்வரும் 2027 ஜனவரி 05 ஆம் திகதிக்கு வழக்கை மீள விசாரணைக்காக ஒத்திவைத்தார்.

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி

வங்காள விரிகுடாவில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 15 முதல் மூன்று தினங்களுக்கு மழைவீழ்ச்சி

மண்டைதீவு புதைகுழி விசாரணை

இன்றைய விசாரணையில் காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி பூர்ணி மரியநாயகம், அதன் பிராந்திய இணைப்பாளர் த.செல்வக்குமார், வேலணை பிரதேச சபை உறுப்பினரும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன், வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் உள்ளிட்டோர் முன்னிலையாகியிருந்தனர்.

யாழ்ப்பாணம் - மண்டைதீவு புதைகுழி விவகாரம் - நீதிமன்றத்தின் உத்தரவு | Court Order Jaffna Mandaitivu Mass Grave Case

குறித்த வழக்கு 2025 செப்டெம்பர் 17ஆம் திகதி முதன்முறையாக ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், தொடர்ச்சியாக மேலதிக கால அவகாசம் கோரப்பட்டு வருவதால், நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாத மண்டைதீவு புதைகுழி விவகாரத்தின் விசாரணைகள் மேலும் தாமதமடைவது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.  

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

ஏ9 வீதி விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதோடு 50 இற்கும் மேற்பட்டோர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023