மேலும் எழுவரின் உயிர் பறிபோனது
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 323ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் உயிரிழந்தோரின் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
வத்தளையைச் சேர்ந்த 75 வயதான பெண்ணொருவர் நேற்று முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 72 வயதான ஆணொருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
உடுகம்பொல பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆணொருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
பொலனறுவை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஆணொருவர், தனது வீட்டிலேயே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
மடவல பகுதியைச் சேர்ந்த 73 வயதான பெண்ணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
கெலிஓயா பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆணொருவர், தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.