உடன் தகவல் தாருங்கள் - பொலிஸார் விடுத்துள்ள அவசர அறிவித்தல்
covid-19
police
peopie
By Vasanth
பொலநறுவை கல்லேல்ல பிரதேசத்திலுள்ள கொரோனா மருத்துவமனையிலிருந்து நேற்று அதிகாலை தப்பிச்சென்ற ஐந்து கைதிகளில் நான்கு பேர் தொடர்பில் தகவல் அளிக்குமாறு பொது மக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு தப்பிச் சென்ற ஐந்து கைதிகளில் ஒருவர் நேற்று பிற்பகல் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
ஏனைய நான்கு கைதிகளில் மூவரின் படங்கள் இன்று பிற்பகல் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0718591233 அல்லது 119 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.



மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி