ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விவாதம் நடத்த தீர்மானம்
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில், இரண்டு தினங்களுக்கு சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று(8) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 21ஆம் மற்றும் 22ஆம் திகதிகளில் விவாதத்தினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சனல் 4 இன் ஆவணப்படம்
பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி அண்மையில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான மற்றும் அதன் பின்னணி குறித்த தகவல்களை ஆவணப்படமாக வெளிப்படுத்தியிருந்தது.

இது தற்போது, இலங்கை அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், எதிர்கட்சி உறுப்பினர்கள் ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், விவாதத்தை நடத்துவதற்கான காலத்தினை ஒதுக்குமாறு சபாநாயகரிடம் கோரியதற்கு அமைய, இரண்டு தினங்களுக்கு விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.