அமெரிக்காவில் ஓடுபாதையில் மோதிக்கொண்ட இரு விமானங்கள்!
அமெரிக்காவில் (United States) ஓடுபாதையில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானங்களின் முகப்பு
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அமெரிக்காவின் சார்லோட்டி டக்ளஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் தரையிறங்கி ஓடு பாதையில் சென்றுள்ளது.
இதன்போது, அந்த விமானம் அதே நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு விமானம் மீது மோதியுள்ளது.
இதில் இரண்டு விமானங்களின் முகப்பு பகுதிகளும் மோதிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்கைகள்
இதில் தரையிறங்கிய விமானத்தின் இறக்கைகள் சேதம் அடைந்துள்ளன.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து விமானிகள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
