பெண்ணின் தலையை கிணற்றுக்குள் போட்டாரா சந்தேகநபர்?
Death
Police
Colombo
By Vasanth
டாம் வீதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தலை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவத்தில் சந்தேகநபராக கருதப்படும் தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி தனது வீட்டுக் கிணற்றில் தலையை போட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதையடுத்து இன்று கிணற்றில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல தீவிர முயற்சிகள் செய்தபோதும் தலை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் குறித்த நபர் அணிந்து வந்த ஆடை அவரது வீட்டு வளாகத்தில் எரிக்கப்பட்டு இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.