தேனீர் தயாரித்து விற்பனை செய்யும் ரோபோக்கள்; எங்கு தெரியுமா?
கொரோனாவால் உலகமே மாறியிருக்கும் சூழலில், மாற்றி யோசனை செய்து, ரோபோக்கள் தேனீர் தயாரித்து விற்பனை செய்யும் தேநீர் விடுதி, துபாயில் ஆரம்பிக்க அது பெரும் ஹிட் அடித்திருக்கிறது. துபாயில் செயல்பாட்டிற்கு வந்திருக்கும் ‘ரோபோ கபே’ எனப்படும் தேநீர் விடுதியில், வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை ரோபோக்களுக்கு தெரிவிக்க, ரோபோக்களே தேநீர் தயார் செய்து, விநியோகம் செய்கின்றன. இது வாடிக்கையாளர்களை கவர, அது பெரும் ஹிட் அடித்துள்ளது.
இந்த ‘ரோபோ கபே’வில், முற்றிலும் ரோபோக்களே பானங்களை தயாரித்து, வினியோகம் செய்கின்றன. தொடுதிரையில் வாடிக்கையாளர் தரும் கட்டளைகளுக்கு ஏற்ப, ரோபோக்கள் செயல்படுகின்றன. இதுகுறித்து அந்த தேநீர் விடுதியின் நிர்வாக இயக்குனர், ரஷீத் எஸ்ஸா லூட்டா கூறுகையில், ‘‘டச் ஸ்கிரீனில் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுக்கும் இந்த ஜெர்மன் தயாரிப்பு ரோபோக்கள், ஆர்டர்களை அட்டவணையாக வரிசைப்படுத்தி, சேவை போட் ரோபோக்கள் மூலம் வழங்குகின்றன.
அங்கு ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் போதோ அல்லது சுத்தம் செய்ய மட்டுமே மனித உதவிகள் தேவைப்படுகின்றன. ரோபோ கபே’ கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தாலும், கொரோனா தொற்று நோய் காரணமாக மார்ச் 2020 முதல் மூடப்பட்டது. இறுதியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட, கடந்த ஜூன் மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.
தற்போது கொரோனா காரணமாக துபாயில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த டீக்கடைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.