வெளிநாடுகளில் வைப்பிலிட்டு கோடிகளில் புரளும் டக்ளஸ்: அம்பலப்படுத்திய ஈபிடிபியின் முக்கிய புள்ளி
ஆட்சிக்கு வரும் போது பொலித்தீன் பையுடன் வந்த டக்ளஸ் தேவானாந்தாவிடம் (Douglas Devananda) தற்போது கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் உறுப்பினர் பொன்னன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை யாழ். ஊடக அமையத்தில் நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “டக்ளஸ் தேவானாந்தாவிடமுள்ள அனைத்து பணமும் அரசாங்கத்தையும் மற்றும் மக்களையும் ஏமாற்றி பெற்ற பணம் தான்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோடிக்கணக்கான பணம் வெனிநாடுகளில் தான் உள்ளன.
சுவிட்சர்லாந்து (Switzerland) மற்றும் அவுஸ்திரேலியா (Australia )போன்ற நாடுகளிலுள்ள வங்கிகளில் தான் அனைத்து பணமும் வைப்பிலிடப்பட்டுள்ளது.
இதற்கு பணத்தை பரிமாற்றும் முக்கிய நபர் கொழும்பில் தற்போது உள்ளதுடன் அவர் ஒரு கோடி செலவில் சைவ உணவகம் ஒன்றையும் நடத்தி வருகின்றார்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கொலை குற்றங்கள், ஊழல் நடவடிக்கைகள், பதுக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம் மற்றும் பலதரப்பட்ட விடங்களை அவர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்ததுடன் எங்கும் தான் வந்து சாட்சியமளிக்க தயார் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
