எல் நினோ தாக்கத்துக்கு முன்னரே இலங்கையில் தீவிரமடையும் வறட்சி நிலை
எல் நினோ குறித்த எச்சரிக்கை இலங்கையில் தீவிரமடைவதற்கு முன்பே பல கிராமங்களில் வறட்சி நிலை பதிவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள வில்கமுவ லடியங்கல பிரதேச மக்கள் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் கிணறுகளிலும் ஏரிகளிலும் சிறிதளவும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்னீர் மீன்பிடித்தல் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த மக்களே இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்படை
இந்நிலையில் அவர்கள் தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக சிறிதளவு தண்ணீரைக் கண்டறிய ஐந்து கிலோமீட்டருக்கும் மேலாக நடந்து செல்லும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ். நெடுந்தீவு பகுதியிலும் வறட்சி நிலைமை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் வெப்ப தாகத்தால் வாடும் காட்டு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக, நெடுந்தீவு கடற்படை வீரர்கள் ஒரு தொட்டியில் தண்ணீரை இறைத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை சந்திக்கவுள்ள எல் நினோ
சுமார் 75 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டதிலேயே மிகவும் கடுமையான எல் நினோ நிகழ்வை இலங்கை சந்தித்து வருவதாகவும், இது உடனடி தண்ணீர் பற்றாக்குறை மற்றும் நீடித்த வறண்ட நிலைமைகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளதாகவும், அதே நேரத்தில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் எல் நினோவின் தாக்கங்களைக் குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழுவால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பல மாவட்டங்கள் ஏற்கனவே குடிநீர் மற்றும் நீர்பாசன விநியோகத்தில் சிரமங்களைச் சந்தித்து வருகிவதாகவும் இருப்பினும் இதன் பாதிப்புகள் முழு மாவட்டங்களையும் பாதிக்காமல், குறிப்பிட்ட பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர் பிரிவுகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் தற்போது அம்பாறை, மொனராகலை, மட்டக்களப்பு, இரத்தினபுர, பதுளை மற்றும் மாத்தளை ஆகியவை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |